படுக்கை விரிப்புக்கு ஜனாதிபதியின் கொடியை பயன்படுத்திய நபர் பொலிஸில் சரணடைந்தார்!

Date:

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை எடுத்து வந்து கட்டிலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இதன் பின்னர் அவரை கைது செய்துள்ளதாக வெல்லவிடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளார்.

54 வயதான அவர் மாலம்பேயில் வசிப்பவராவார்.

ஜூலை 09 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமித்ததையடுத்து குறித்த நபர் கொடியைத் திருடியுள்ளார்.

இந்நிலையில், அந்த நபர் தனது இடுப்பில் கொடியைக் கட்டிக்கொண்டு நடமாடுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதன்பிறகு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், அந்த நபர் கொடியை படுக்கை விரிப்பாகப் பயன்படுத்தியதாகவும், அதை எரித்து அழிக்கவும் நினைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகள் மூலம் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நபரை பிடிக்க பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...