பாகிஸ்தானின் முக்கியமான மாநில இடைத்தேர்தலில் இம்ரான் கானின் கட்சி அபார வெற்றி!

Date:

தெற்காசிய நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தானின்  பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளில் 15 இடங்களில் இம்ரான் கானின் எதிர்க்கட்சியான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அதேநேரம், ஆளும் கட்சியின் மரியம் நவாஸ் திறந்த மனதுடன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சட்டசபை இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

வெற்றிடமாகவுள்ள உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்து, வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியானது.

இந்நிலையில், சட்டசபை இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 16 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை “தோல்வியும் வெற்றியும் தேர்தலின் ஒரு பகுதி. இதை   நாம் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும், தோல்வியை “திறந்த இதயத்துடன்” ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மரியம் நவாஸ் தனது ட்விட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ்  இரண்டு இடங்களை மட்டுமே பெற முடிந்தது, ஒரு இடம் சுயேச்சை வேட்பாளருக்கு கிடைத்தது.

அத்தோடு, பிரதம மந்திரி ஷேபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷெஹ்பாஸை முதலமைச்சர் அலுவலகத்திற்கு ஆதரித்த 20  சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் இந்த இடங்கள் காலியாகின.

மே மாதம் பஞ்சாப் முதல்வராக ஹம்சா தேர்ந்தெடுக்கப்பட்டார், இருப்பினும் இடைத்தேர்தலுக்குப் பிறகு முதல்வர் அலுவலகத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...