பாதாள உலக உறுப்பினரான சமன் ரோஹித என அழைக்கப்படும் ‘பாஸ் போட்டா’ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
ஜூலை 27 புதன்கிழமை கம்பஹா நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இனந்தெரியாத நபர் ஒருவரால் சுடப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
காரில் வந்த இனந்தெரியாத நபர்கள், நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த ‘பஸ் பொட்டா’ மற்றும் பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.