பாராளுமன்ற நுழைவாயில், காலி முகத்திடலில் பாதுகாப்பு!

Date:

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக, காலி முகத்திடலில் உள்ள “கோட்ட கோ கம” மற்றும் பாராளுமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் ஆயுதம் ஏந்திய மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெருமளவானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, உளவுத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

வெற்றிடமாகவுள்ள ஜனாதிபதி பதவிக்கு வாரிசை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

Popular

More like this
Related

புதிய சட்ட விதிகள்: பஸ் சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை.

பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய சட்டவிதிகள் மற்றும் பரிசோதனைகள்...

கலஹா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

கண்டி, கலஹா பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல், சந்தை மதிப்பில்லாத...

IMF பிரதிநிதிகள் இன்று நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22)...

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க துருக்கி இணக்கம்.

இலங்கைக்கான  துருக்கி தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü...