இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய இரண்டாவது கிலோ மீட்டருக்கு அறவிடப்படும் கட்டணம் ரூ.90 ஆக குறைக்கப்பட்டுள்ளது என சங்கத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜெயரூக் தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலை குறைப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, இரண்டாவது கிலோமீட்டரின் விலை ரூ. 100 ஆக காணப்பட்டது.
எவ்வாறாயினும், அத்துடன், முதலாவது கிலோமீட்டருக்காக தற்போது அறவிடப்படும், 100 ரூபா கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.