வாக்களிப்பு நிலையத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம்: சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!

Date:

பாராளுமன்றில் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நிலையத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உரிய விதிகளுக்கு அமைவாக பாராளுமன்றத்தினால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய வாக்கெடுப்பில் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அதனை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1981 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் பிரகாரம் அனைத்து வழிகாட்டல்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இரகசிய வாக்கெடுப்பின் தேர்தல் அதிகாரியாக செயற்படும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

புதிய சட்ட விதிகள்: பஸ் சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை.

பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய சட்டவிதிகள் மற்றும் பரிசோதனைகள்...

கலஹா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

கண்டி, கலஹா பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல், சந்தை மதிப்பில்லாத...

IMF பிரதிநிதிகள் இன்று நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22)...

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க துருக்கி இணக்கம்.

இலங்கைக்கான  துருக்கி தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü...