இந்திய வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை!

Date:

இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி, புதுடெல்லியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

இலங்கையில் இந்தியர்களின் பாதுகாப்பை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இலங்கையில் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், இது தொடர்பாக இந்திய குடிமக்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாகவும் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

இந்திய குடிமக்கள் இலங்கையில் இருக்கும்போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டுமெனவும்,  எந்தவொரு அத்தியாவசியப் பயணத்திற்கும் நாணய மாற்றம் மற்றும் எரிபொருள் நிலைமை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய காரணிகளையும் அவர்கள் ஆராய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...