இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

Date:

மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று : நாட்டைச் சூழவுள்ளகடற் பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

Popular

More like this
Related

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...