இலங்கை மற்றும் ஓமன் உறவுகள் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது!

Date:

ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட், இலங்கை – ஓமன் உறவுகள் கடந்த, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற தலைப்பில் 164 பக்கங்களைக் கொண்ட புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நூல் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான உறவுகளை விபரிப்பதுடன் அதன் எதிர்காலக் கண்ணோட்டத்தை முன்னறிவிக்கிறது.

பிளாக் ரூ ஒயிட் மீடியா அண்ட் சர்வீசஸ் எல்.எல்.சியால் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம்,  கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி வெளியுறவு அமைச்சகத்தின் இராஜதந்திர நிறுவனத்தில், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இராஜதந்திர விவகாரங்களின் துணைச் செயலர் ஷேக் கலீஃபா அல் ஹார்தியால் வெளியிடப்பட்டது.

இந்தப் புத்தகம் ஓமன் மற்றும் இலங்கையின் நட்புறவின் வலிமைக்கு மட்டுமல்ல, இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத்தின் குணாதிசயத்தின் வலிமைக்கும், வாழ்க்கையின் ஒவ்வொரு முயற்சியையும் அவர் மேற்கொள்ளும் ஆர்வத்துக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு சான்றாகும் என என்று ஓமன் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

பெப்ரவரி 17, 2021 அன்று நினைவுகூரப்பட்ட இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...