ஊடகவியலாளர்களுக்கான பட்டய ஊடக நிறுவனமொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி!

Date:

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கான பிரத்தியேக நிறுவனமொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

அமைச்சரின் கருத்துப்படி இவ்வாறான ஒரு நிறுவனத்தை அமைப்பதற்கான ஆரம்ப அமைச்சரவை அங்கீகாரம் 2021 இல் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி நிறுவனத்தை மறுபெயரிடவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பத்திரிகையாளர்களின் பட்டய நிறுவனம், ஊடக வல்லுநர்களின் பட்டய நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்காக பிரத்தியேகமாக வெளிப்பட்ட பட்டப்படிப்புகள் எதுவும் இல்லாததால், இளங்கலைப் பட்டப்படிப்புகளை இலகுபடுத்துவதற்கு இந்நிறுவனம் உத்தேசித்துள்ளதா என அமைச்சரிடம் வினவியபோது, சர்வதேச தரத்திற்கமைய அந்த நிறுவனம் அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தும் என அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

இந்த நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள பத்திரிகையாளர்களின் பட்டய நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்படும் மற்றும் டிப்ளோமா திட்டங்கள், பட்டதாரி திட்டங்கள், முதுகலை திட்டங்களை வழங்க உத்தேசித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...