சில நிமிடங்களுக்கு முன்னர், காலி முகத்திடல் போராட்டக்கள பகுதியில் தங்கியிருந்த மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாட்டாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
15 நிமிடங்களில் அவர்கள் தங்கியிருந்த கூடாரங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தை விட்டுச் செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பொலிஸாரின் அறிவித்தலின் பிரகாரம் குறித்த குழுவினர் கூடாரங்களை அகற்றியுள்ளனர்.
காலிமுகத்தில் போராட்ட களம் அமைந்துள்ள பகுதிக்கு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.