அளுத்கம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து 3,100 ரூபா பெறுமதியான குழந்தைகளுக்காக கொடுக்கப்படும் பால் மாவை திருடிய குற்றச்சாட்டில் 30 வயதுடைய மீனவர் தந்தை ஒருவர் அளுத்கம பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது ஒரு வயது எட்டு மாத குழந்தையின் பசியை போக்க பால் பவுடர் டப்பாவை திருடியதாக அவர் அழுது கொண்டே பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த தந்தை பல்பொருள் அங்காடிக்கு சென்று பால் பவுடர் டப்பாவை எடுத்து அவர் அணிந்திருந்த சட்டையில் மறைக்க முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து பெண் ஊழியர் ஒருவர் சம்பவத்தை பார்த்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்து சந்தேகநபரான தந்தையை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.