கொழும்பில் வாழ் மக்களின் பேஸ்புக் கணக்குகளை பார்ப்பதே பொலிஸாரின் வாடிக்கையாகிவிட்டது: மனோ

Date:

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவான கொழும்பில் வாழும் மக்களின் முகநூல் கணக்குகளை பார்ப்பது பொலிஸாரின் பிரதான கடமைகளில் ஒன்றாகும் என கொழும்பு மாவட்ட உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிஸார் கொழும்பில் வாழும் மக்களின் முகநூல் கணக்குகளுக்குள் பிரவேசித்து அதனை பதிவிறக்கம் செய்து,  முடிவடைந்து விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு மக்களின் பின்னால் சென்று அச்சுறுத்துகின்றனர்.

அத்தோடு மக்களைப் பின்தொடர்ந்து கொண்டுபோய் பயமுறுத்துவதுதான் பொலிஸார் பிரதான வேலை, இவ்வாறான செயற்பாடுகளை தாம் முற்றாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல ஜனாதிபதி மாளிகை ஆக்கிரமிக்கப்பட்ட போது, பொலிஸார் கூட தங்கள் சீருடையில் உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்துவதை தான் பார்த்ததாக அவர் கூறினார்.

இவற்றைப் பார்த்த பொதுமக்களும் மிருகக்காட்சிசாலையை பார்ப்பது போல் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றதாகவும் எனவே பொது மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என பொலிஸாரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...