கொவிட் தடுப்பூசியின் 4வது டோஸை வழங்க ‘மொபைல் தடுப்பூசி’ தளங்கள்!

Date:

கொவிட்- 19 தடுப்பூசியின் நான்காவது டோஸை வழங்குவதற்கு ‘மொபைல் தடுப்பூசி’ தளங்கள் அல்லது வாகனங்களைப் பயன்படுத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, தேவைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட இடங்களுக்கு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

நான்காவது டோஸ் மேலும் பெரிய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளால் வழங்கப்படுகிறது.

டெங்கு, கொவிட்-19 மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பெரும்பாலான குழந்தைகள் டெங்கு நோயினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருமான டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து பெரியவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...