சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இம்மாத இறுதியில் இலங்கை வரும்:மத்திய வங்கி ஆளுநர்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் நடாத்தப்படும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிககையிலே அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதாரத்திலும் சில சாதகமான முடிவுகள் காணப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துறைகளின் செயல்திறன் குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், சமீபத்திய மின்சாரக் கட்டண உயர்வைச் சேர்த்த பிறகும், மொத்தப் பணவீக்கம் 65 சதவீதத்தைத் தாண்டாது என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

இதேவேளை இந்த வருடத்தின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாகவே இருக்கும் என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு பிரிவின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஜானக எதிரிசிங்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

ரணிலின் விளக்கமறியல்: நீதிமன்ற வளாகத்தில் கடும் பதற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்...

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில்...

நான்காவது அறிவுக் களஞ்சியம் இறுதிப் போட்டி கொழும்பில்..!

தேசிய மட்டத்திலான நான்காவது அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது நாளை 23...