சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்படும்!

Date:

இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்,  பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகளை அறிமுகப்படுத்துவதற்காக, குழந்தை பராமரிப்பு துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொடர்புடைய நிபுணர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்டது

பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்காக தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நியதிகள் ஏற்கனவே மாகாண மட்டத்தில் நடைமுறையில் உள்ளதாகவும், ஆனால் தேசிய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டல் எதுவும் இல்லை எனவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...