ஜப்பானியத் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் (Mizukoshi Hideaki) இடையிலான சந்திப்பு ஒன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

ஜப்பானியப் பேரரசர் ஹிரோனோமியா நரஹிட்டோவின் (Hironomia Narahito) வாழ்த்துகளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவித்த ஜப்பானியத் தூதுவர், ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, சென்பிரான்சிஸ்கோ சமாதான மாநாட்டில் உரையாற்றி, 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஜப்பான் தூதரகமும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள விசேட நிகழ்ச்சி, செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் அது தொடர்பாகவும் குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...