மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி மற்றும் அதன் துணை நிறுவனமான IIIT யும் இணைந்து வழங்கிய தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது சாதாரணதரம் எழுதிய மாணவர்களுக்கான (LEADERSHIP & MANAGEMENT STUDIES-2022) என்ற 50 நாள் வதிவிடப்பயிற்சி நெறியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
IT, English, தலைமத்துவம் மற்றும் முகாமைத்துவ பயிற்சி நெறிகள், இஸ்லாமிய கற்கைகள், குர்ஆனிய கற்கைகள் தர்பிய்யா மற்றும் ஆர்வமூட்டல் அமர்வுகள் என பல உள்ளடக்கங்களை இப்பயிற்சி நெறி உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.