தாய்வானை அமெரிக்கா கைவிட்டுவிடாது,இரும்பு கவசம் போல் துணை நிற்கும் :நான்சி பெலோசி

Date:

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அரசுமுறை பயணமாக தாய்வான் சென்றுள்ளார்.

இந்நிலையில் தாய்வானை தங்கள் நாட்டின் ஓர் அங்கம் எனக்கூறி வரும் சீனா, நான்சியின் இந்தப் பயணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் நான்சியின் இந்த பயணத்திற்கு அமெரிக்கா மிகப்பெரிய விலையை கொடுக்கும் என்று சீனா எச்சரிக்கையும் விடுத்தது.

நான்சி பெலோசி தாய்வான் ஜனாதிபதி டிசைங்க் வென்னை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

அதன்பின் நான்சி பெலோசி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது சீனா-தாய்வான் இடையே போர் பதற்றம் உலகம் தற்போது ஜனநாயகம், சர்வாதிகாரம் ஆகிய இரண்டில் எதேனும் ஒன்றை தேர்தெடுக்கும் சூழ்நிலையில் உள்ளது.

தாய்வான், உலகின் பிற நாடுகளிலும் ஜனநாயகத்தை அமெரிக்கா இரும்புக்கரம் கொண்டு பாதுகாக்க உறுதியாக உள்ளது. தாய்வானை அமெரிக்கா கைவிட்டுவிடாது.

என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்த வருகை தைவானை அமெரிக்கா கைவிடாது என்பதை வெளிப்படுத்தும் செயல். வளர்ந்து வரும் ஜனநாயகம் கொண்டது தாய்வான்.

மேலும் சவால்களை சந்தித்தபோதிலும் அமைதி மற்றும் வளமிக்க எதிர்காலம் ஆகியவற்றை நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியான தீர்மானம் ஆகியவை கட்டியெழுப்பும் என உலகிற்கு நிரூபித்து உள்ளது.

இதுவரை இல்லாத வகையில் தைவானுடன் அமெரிக்கா நல்லிணக்கத்துடன் இருப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த செய்தியையே நாங்கள் இன்று உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தாய்வான் வந்து அந்நாட்டு ஜனாதிபதி சந்தித்துப் பேசிய பின் நான்சி பெலோசி தனியாக அமெரிக்க விமானம் ஒன்றில் தைபே நகரில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...