நாளாந்தம் சமூக வலைத்தளங்களிலும், முகநூல்களிலும் வசைபாடுவதையே சில இளைஞர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்: அமைச்சர் நஸீர் அஹமட்!

Date:

இஸ்லாம் கூறும் நற்செயல்களை வாழ்வில் கடைப்பிடிக்க, முஹர்ரம் மாதத்திலிருந்து முன்வர வேண்டும் என சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

முஹர்ரம் மாதப்பிறப்பை கொண்டாடும் விஷேட நிகழ்வு நேற்று கொழும்பு சிவப்பு ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதில்,பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதில் உரையாற்றிய அமைச்சர்….

முஸ்லிம் உம்மத்தின் கட்டுக்கோப்பு குலையாதிருப்பதையே அல்லாஹுத் தஆலா விரும்புகிறான். இதனை வலியுறுத்தும் வகையில் “நீங்கள் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்” என்று திருமறை கூறுகிறது. இந்த இறைவசனம் பற்றி எமது இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். நாளாந்தம் சமூகவலைத்தளங்களிலும், முகநூல்களிலும் வசைபாடுவதையே சில இளைஞர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர.

இது, எமது சமூகத்துக்குள் பிளவுகளை தோற்றுவிக்கிறது. ஒரு மனிதனை நோவினை செய்வது சர்வசாதாரணமாகிவிட்டது. இதற்கான தண்டனைகள் குறித் து இறைவன் எச்சரிக்கிறான். எனவே, சமூக வலைத்தளங்களில் நேரத்தை விரயமாக்காது, புனித குர்ஆனை விளங்க, படிக்க மற்றும் ஓதுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.

புனித குர்ஆனின் அர்த்தங்களை படிக்க முனைந்தால், இந்த எச்சரிக்கை பற்றிய அச்சங்கள் எழும். குர்ஆனை படிப்பதற்கு அரபுமொழி தெரிந்திருக்க வேண்டுமென நினைக்காதீர்கள். ஆசையோடு முயற்சித்தால் அல்லாஹ் அருள்புரிவான். 1972 இல், எனக்கு 11 வயதாக இருக்கும் போதுதான் புனித குர்ஆனை படிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இதே, பள்ளிவாசலில் “தறாவீஹ்” தொழுகையில் ஓதப்பட்ட “நீங்கள் உங்களுக்குள் தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் என்ற வசனமே இந்த ஆசையை ஏற்படுத்தியது. நாட்டில் இன்றுள்ளது பொருளாதார பிரச்சினை தீர்ந்து சுமுக நிலை ஏற்பட முஸ்லிம்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...