நாடு எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து நிச்சயமாக மீளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற பெரஹர உற்சவத்தின் நிறைவைக் குறிக்கும் பாரம்பரிய வைபவத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களுக்கும் நல்ல வாழ்க்கையை பெற்றுக்கொடுக்கும் புதிய பொருளாதாரம் தொடர்பில் அனைவரும் புதிய நம்பிக்கைகளுடன் முன்னோக்கி செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தியவதன நிலத்தின் பாரம்பரிய செய்தியை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட ஜனாதிபதி ஊர்வலத்தில் சென்ற யானைகளை அடையாளப்படுத்தும் யானைக்கு பழ உபசாரத்தையும் வழங்கினார்.
பின்னர் பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதியும் நிலமேகளும் குழு புகைப்படத்தில் கலந்து கொண்டனர்.
பெரஹராவில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி அவர்களால் பரிசில்களும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் 07 மகத்தான விருதுகள் உட்பட 162 விருதுகள் அங்கு வழங்கி வைக்கப்பட்டன.
இதற்காக எசல பெரஹரா அறக்கட்டளை மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பன வருடாந்த அனுசரணையை வழங்குகின்றன.
பின்னர் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலா அவர்கள் வரலாற்று ஊர்வலத்தின் முடிவு பற்றிய உண்மைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஜனாதிபதி தலைமையிலான பேரவையில் சமர்ப்பித்தார்.
கிராமிய விகாரைகளுக்கான ‘எசல பெரஹரா அறக்கட்டளை’க்கான நிதியுதவி ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டதுடன், ‘புனிதப் பல்லக்கு கலாச்சாரம்’ புத்தகமும் வழங்கி வைக்கப்பட்டது.