எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 29) பாராளுமன்றத்திலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு, மேற்படி குழுவை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் யோசனை தெரிவித்தார்.
குறிப்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் பல முன்னாள் எம்.பி.க்கள் இந்த எரிபொருளை மிகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடியும் என கூறியுள்ளனர்.
விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அவ்வாறான குழுவை அமைத்து எதிர்க்கட்சிகளுக்கு வழங்கினால், அதற்குத் தேவையான பூரண ஆதரவு வழங்கப்படும். அதை ஏற்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இதேவேளை, பாராளுமன்றத்தில் மேலும் பல குழுக்களை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக சபைத் தலைவர் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.