2008 ஆம் ஆண்டு மாவனல்லைப் பிரதேசத்தில் புத்தர் சிலைகளை சேதப்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 16 முஸ்லிம் இளைஞர்கள் கேகாலை மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.
கைதான 45 பேரில் 16 பேர் கேகாலை மேல் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிபதிகளான ஜகத் கஹந்தகமகே (தலைவர்) ஜயகி டி அல்விஸ் மற்றும் இந்திரிகா கலிங்கவாசா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையில் மூவர் விடுவிக்கப்பட்டதோடு, 11 பேர் 7 வருடம் ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இருவர் குற்றத்தை ஏற்றுக் கொள்ளாததனால் அவர்கள் குறித்து அடுத்த நடவடிக்கை எடுப்பதற்கு சட்டமா அதிபரின் கருத்தினைக் கோருவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பல மாதங்களாக நீடித்த விசாரணையின் தீர்ப்பு கடந்த 2 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு மேலாக 10,000 ரூபாய் அபராதமும் இவர்களுக்கு விதிக்கப்பட்டது.
தண்டனை வழங்கப்படும் போது முறைப்பாடு தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் குற்றவாளிகள் தொடர்பில் ஆஜரான சட்டத்தரணி முன்வைத்த காரணங்களான சந்தேக நபர்கள் மூன்றரை வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பதும் இதற்கு முன் எவ்வித குற்றமும் செய்திருக்காத குற்றவாளிகள் என்பதும் விரைவான விடுதலைக்காக குற்றத்தை ஏற்றுக் கொண்டனர் என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இவர்களுக்கு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழே ஆரம்பத்தில் வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் சட்டமா அதிபருக்கு விடுத்த வேண்டுகோளையடுத்து, குற்றவியல் சட்டத்தின் 209, 290 ஷரத்துகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் குற்றத்தை ஏற்றுக் கொண்டதனையடுத்தே குறைந்த தண்டனை விதிக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டுக்கு முன் சிறுபான்மையினர் குறிப்பாக, முஸ்லிம்களை இலக்காக மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்து குற்றவாளிகள் நாட்டில் தமக்கு எதிர்காலத்தில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுமா என்ற அச்சத்திலும் வீதியிலும் வாழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்திருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.
சிறுபான்மையினர் மத்தியில் உருவாகியுள்ள பீதியையும் அச்சத்தையும் போக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறினர் என்றும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியதோடு, இவர்கள் மாவனல்லைப் பிரதேசத்தில் பெரும்பான்மை மக்களுடன் சமாதானத்துடனும் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் மற்றும் சட்டத்தரணிகளான ருஷ்டி ஹபீப், சம்பத் ஹேவா பத்திரன ஆகியோர் இவர்கள் சார்பில் ஆஜராகினர்.
2018 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி அன்று மாவனெல்லை லிந்துல புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கு முன், 2018ல் மட்டும் 18 மசூதிகள் தாக்கப்பட்டன. இருந்தும் சிலையை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
மாவனெல்லை பிரதேசத்தில் தாம் எப்போதும் பெரும்பான்மை சமூகத்துடனும் ஏனைய அனைவருடனும் அமைதியாக வாழ்ந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு பிணை வழங்கப்படாததாலும், விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதாலும் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அவர்களுக்கு எந்த குற்றப் பதிவும் இல்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் கூறினார்.