பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்ற இலங்கை அணியின் 12 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அணியை விட்டு வெளியேறியுள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களில் மூவர் கடந்த வாரம் தப்பிச் சென்றதாகவும், ஏனைய ஏழு பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவிக்காமல் குழுவிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குழுவிலிருந்து தப்பியோடியிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறானதொரு நிலை உருவாகியிருக்கலாம் எனவும் ஏ.எப்.பி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஏறக்குறைய 160 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பிரித்தானியாவிற்கு வந்துள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஜூடோ, குத்துச்சண்டை, பீச் வாலிபால் மற்றும் மல்யுத்தம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியின் அதிகாரி உட்பட 12 இலங்கை விளையாட்டு வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நான்கு விளையாட்டு வீரர்கள் காணாமல் போனதாக புகார் எழுந்தது மற்றும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் இது குறித்து விசாரணையை தொடங்கினர்.