பொருளாதார நெருக்கடிக்கு ஜப்பான் – தென்கொரியாவின் உதவிகள் இலங்கைக்கு தேவை: ஆசிய மன்றம்!

Date:

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், உதவ வேண்டுமென பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆசிய மன்றம் வலியுறுத்தியுள்ளது.

22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் பணவீக்கம் 60.8 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. மேலும் அந்நிய செலாவணி கையிருப்புக்கு மத்தியில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையை நாடு எதிர்கொண்டுள்ளது.

தற்போது இலங்கை மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவசர தேவை இருந்த போதிலும் சர்வதேச நாணய நிதியத்துடனான பிணை எடுப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள பல மாதங்கள் ஆகுமென ஆசிய மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள், ஆசியாவின் இரண்டாவது மற்றும் நான்காவது பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளாகும்.இந்த நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், விரைவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், அதன் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தவும் உதவுவது கட்டாயம் என்று ஆசிய மன்றம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...