முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வு பிரிவினரால்கைது!

Date:

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

2007ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் சில்வா அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய விசாரணைக்காக சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடந்த வாரம் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...