ரஞ்சன் விடுதலைக்கான ஆவணங்களில் கையொப்பமிட்டார்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியுடன், சிறைவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கான ஆவணங்களில் தாம் கையொப்பமிட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  (26) அல்லது திங்கட்கிழமை (29) விடுதலை செய்யப்படுவார் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக அயராது உழைத்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஹரின் பெர்னாண்டோ நன்றியும் தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 2017 இல் நீதித்துறையைப் பற்றி அவமதிக்கும் கருத்துக்கள் தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில், நடிகராக மாறிய அரசியல்வாதிக்கு உச்ச நீதிமன்றத்தால் ஜனவரி 12, 2021 அன்று நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் திரு ராமநாயக்கவை மன்னித்து விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...