விமல் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும்!

Date:

எதிர்வரும் அடுத்த மாதம் 4ஆம் திகதி விமல் வீரவன்ச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என சுயேட்சைக்குழு தெரிவித்துள்ளது.

ஶ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர், அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் இதனை கூறினர்.

புதிய அரசியல் கூட்டணியின் பெயரும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மேலும், தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் வெளியிடப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பான பல சுற்றுக் கலந்துரையாடல்கள் கடந்த சில நாட்களாக சுயேட்சைக்கட்சிகள் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றன.

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 9 கட்சிகள் இந்த புதிய கூட்டணியை உருவாக்க தீர்மானித்துள்ளன.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...