வௌிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்களுக்கான அறிவிப்பு!

Date:

வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதியாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த விசேட விசேட கருமபீடத்தை திறப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அங்கீகாரம் அளித்திருந்தார்.

முன்னைய திட்ட நடவடிக்கைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் அனைத்து இலங்கையர்களுக்கும் வசதியாக நேற்று (23) முதல் இந்த விசேட கருமபீடத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இருந்து தமது வெளிநாட்டு தொழில்வாய்ப்பு தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரர்கள் அதற்கான தமது ஆரம்பச் செயற்பாடுகளை நிறைவுசெய்த பின்னர், இந்த விசேட கருமபீடத்தில் ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தமது கடவுச்சீட்டை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...