ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு விசாரணை நவம்பருக்கு ஒத்திவைப்பு!

Date:

டிபென்டர் ஒன்றில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் மேலதிக விசாரணையை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததுடன், அவரது சிரேஷ்ட சட்டத்தரணி அஷான் பெர்னாண்டோ சுகயீனமடைந்துள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு வேறொரு திகதியை வழங்குமாறு கோரினார்.

இதனையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 16ஆம் ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் சாட்சியை ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...