அடுத்த பதினைந்து நாட்களில் அதிகளவானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகலாம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் சமூகம் கூடும் இடங்களில் நோய் அறிகுறிகளுடன் கூடியவர்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருவதாகவும் உபுல் ரோஹன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார வைத்தியர் அலுவலகத்தில் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் இல்லாததால் நோயாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் துரதிஷ்டவசமான மரணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சுகாதார ஆலோசனைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.