மன்னார் மற்றும் பொன்னேரியில் பகுதிகளில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை நிறுவுவதற்கு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரம்,இரண்டு காற்றாலை மின் திட்டங்களை நிறுவ அனுமதிப்பதன் மூலம் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்படும் என அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்வதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால், இது தொடர்பான இரண்டு திட்டங்களை நிறுவனத்திற்கு வழங்குவதில் தமக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார்.