நாட்டில் போதியளவு அரிசி இருப்பதனால் அரிசி இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அமைச்சரவையில் கோருவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.
விவசாய விதை இறக்குமதியாளர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அரிசி இறக்குமதியை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை இடைநிறுத்துமாறு இன்று (01) அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.