சட்டத்தரணிகள் ஊடாக இன்று (ஆகஸ்ட் 12) நீதிமன்றத்தில் ஆஜராகிய அருட்தந்தை ஜீவந்த பீரிஸை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரான ஜீவந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
எனினும் இந்தக் கோரிக்கையை நிராகரித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, தந்தை ஜீவந்த பீரிஸை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், தந்தை ஜிவந்த பீரிஸ் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நாளை பொலிஸாரிடம் சென்று வாக்குமூலம் வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த புகார் மனுவை மீண்டும் ஆக. 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.