அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!

Date:

விளையாட்டுத்துறை பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட் நிறுவனம்) கோரிக்கை கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினதும் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களினதும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அர்ஜுன ரணதுங்க வெளியிட்ட கருத்துக்கு எதிராக நஷ்ட ஈடு வழங்குமாறு கோரியே அர்ஜுன ரணதுங்கவுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் கடிதம் அனுப்பியுள்ளது.

விளையாட்டுத்துறை பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க அண்மையில் ஊடக நேர்காணலின் போது வெளியிட்ட பொய்யான, இழிவான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட கருத்து தொடர்பாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு நேற்று அவசரமாகக் கூடி ஆராய்ந்தது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக குழுவுக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் பேசி, அதன் நன்மதிப்பு மற்றும் நற்பெயரைக் கெடுத்து, வேண்டுமென்றே இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவுக்கு எதிராக பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பகிரங்க கருத்துக்களை வெளியிட்டதால் அவருக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைய, பொய்யான மற்றும் இழிவான கருத்துக்களின் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு ஏற்படுத்திய நற்பெயர் இழப்புகளுக்கு 2 பில்லியன் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறு கோரி, அர்ஜுன ரணதுங்கவுக்கு நிறைவேற்றுக் குழுவினர் கோரிக்கை கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

“казино Slottica Официален Сайт

Slottica Casino 200% До 100 + 25 Бонус Завъртания"ContentБиблиотека...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...