அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 46 பேர் நாடு கடத்தப்பட்டனர்!

Date:

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த 46 பேர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களை ஏற்றி அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரின் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பலர் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடுகளுக்கு பபயணித்துள்ளனர் அத்துடன் பலர் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் கூறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே இலங்கையைச் சேர்ந்த 46 சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களின் படகினை கடந்த ஜூலை மாதம் 21ம் திகதி அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்குள் நுழைந்த போது அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூலை 6 ஆம் திகதி மட்டக்களப்பு வாழைச்சேனையிலிருந்து மீன்பிடி படகில் பயணத்தை ஆரம்பித்தாக குறிப்பிடப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதனையடுத்து 46 பேரை ஏற்றிய அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரின் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...