ஆறு மாதங்களுக்கு நாட்டை வழிநடத்த ஜனாதிபதிக்கு அனுமதி வழங்குவோம்: வஜிர கோரிக்கை

Date:

ஒரு வருடமாக காணப்படாத எரிவாயுவும்,  இரசாயன உரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தென்பட ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அதேநேரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆறு மாதங்களுக்கு நாட்டை வழிநடத்த அனுமதிக்க வேண்டும்.

இந்த தருணத்தில் தொழிற்சங்க சபைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால் அது டீசல், பெற்றோல் இழப்புக்கு வழிவகுக்கும் எனவும் இளைஞர்களின் எதிர்காலம் அழிந்துவிடும் எனவும் அபேவர்தன தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களுக்கும் உரிமைகள் உள்ளன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், ஆனால் தற்போது வீழ்ந்து வங்குரோத்து நாடாக நாம் காணப்படுகின்றோம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற வேளையில் ரணிலுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தால் பெற்றோல், எண்ணெய், பெற்றோலிய பிரச்சனைகள் தீர்ந்து நாடு வழமைக்கு திரும்பும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...

நாட்டில் சில பகுதிகளில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்

இன்றையதினம் (12) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...