இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) நிதியமைச்சராக, இடைக்கால பாதீட்டை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

4672 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதனையடுத்து, பிற்பகல் 2 மணிவரை நிதியமைச்சரின் பாதீட்டு உரை இடம்பெறும்.

அதனையடுத்து, நாளை வரை சபை ஒத்திவைக்கப்படுவதுடன்,  இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், நாளை முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் நடைபெற உள்ளது.

இந்த விவாதத்தை காலை 9.30  முதல் மாலை 5.30 வரை இடைவேளையின்றி நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக இன்று சமர்ப்பிக்கும் இடைக்கால பாதீட்டு திட்டம் எதிர்வரும் 04 மாதங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் சமர்ப்பிக்கப்படுகிறது.

திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலமானது பொதுநிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிகப் பணத்தை ஒதுக்குகிறது. அதற்காக 735 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டு அமைச்சுக்கு 467 பில்லியன் ரூபாவும், பாதுகாப்பு அமைச்சுக்கு 376 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல...

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது: சுகாதார அமைச்சு

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 'என்டோரோமிக்ஸ்' (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக...

மார்பக புற்று நோயால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால்...

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இந்தியா பிரதமருடன் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,...