கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட 129 நோயாளர்கள் இன்று (15) புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் பதிவான மொத்த ‘கொவிட்’ நோயாளிகளின் எண்ணிக்கை 668,141 ஆகும்.
இதேவேளை நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக நாளாந்தம் வெளியாகும் அறிக்கைகளில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு முறையும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, கொவிட் இறப்புகளும் அதிகரித்து வருவதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சமித்த கினகே தெரிவித்தார்.
மக்களுக்கு மூன்றாவது டோஸ் விரைவில் கிடைக்க வேண்டும் . 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மூன்றாவது டோஸ் இன்னும் பெறவில்லை என்று தலைமை தொற்றுநோய் நிபுணர் தெரிவித்தார்.