இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக காலித் ஹமூத் நியமனம்

Date:

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக காலித் ஹமூத் நாசர் அல்-கஹ்தானி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக கடமையாற்றிய அப்துல் நாசர் எச். அல் ஹாரித், கடந்த மார்ச் மாதம் தனது கடமையினை வெற்றிகரமாக நிறைவுசெய்து கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே காலித் ஹமூத் நாசர் அல்-கஹ்தானி நியமிக்கப்பட்டுள்ளதுடன் புதிய தூதுவர், கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் தனது கடமைகளை விரைவில் பொறுப்பேற்கவுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கான புதிய சவூதி தூதுவருக்கும், சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் பக்கீர் அம்சாவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று (31) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

சவூதி அரேபியாவின் தலைநகரான றியாதிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை கட்டியொழுப்புவது தொடர்பில் இரண்டு தூதுவர்களும் விரிவாக கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...