இலங்கையை ஏற்றுமதி சார்ந்த போட்டி சமூக சந்தைப் பொருளாதாரமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கருத்துடன் தாம் உடன்படுவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரையை ஆமோதித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்குரார்ப்பண உரையில் கூறியது போல வளர்ந்து வரும் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் களத்தின் மையமாக இலங்கையை நவீன ஏற்றுமதி சார்ந்த போட்டி சமூக சந்தைப் பொருளாதாரமாக உருவாக்க வேண்டும்.
நான் நூற்றுக்கு நூறு ஒப்புக்கொள்கிறேன், என்னுடையதும் அதே கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொது வேலைத்திட்டத்தில் புதிய இலங்கையை உருவாக்குவதற்கு குறிப்பாக அனைத்து கட்சி அல்லது பல கட்சிகளை கொண்ட அரசாங்கத்தை அமைப்பதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாம் ஒன்றுபட வேண்டும், குறிப்பாக, ஒரு பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டத்தில் இந்த புதிய இலங்கையை உருவாக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்து அல்லது பல கட்சி அரசாங்கம். அப்படியானால், வருங்கால சந்ததியினர் நம்மை நியாயப்படுத்துவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.