இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு இரண்டு நாட்களாக டீசல் கிடைக்கவில்லை என இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்போது சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாடு முழுவதிலும் உள்ள பல இ.போ.ச பஸ்களுக்கு டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் டீசல் கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்த அந்த அதிகாரி, இந்த நிலை காரணமாக டிப்போக்களில் இருந்து பேருந்துகளுக்கு டீசல் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.