எரிபொருள் பிரச்சினை காரணமாக தனியார் பேருந்துகள் 50 வீதத்தால் குறைக்கப்படும்!

Date:

எரிபொருள் பிரச்சினை காரணமாக நாளை  தனியார் பஸ்கள் 50 வீதத்தால் குறைவடையும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

உரிய முறையில் எரிபொருள் கிடைத்தால் அடுத்த வாரம் முதல் பஸ்களை வழமையாக இயக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனியார் பஸ்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக கொழும்பு பஸ்டன் மாவத்தையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளை வழங்குமாறு மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருளை உரிய முறையில் வழங்கினால் மாகாணங்களுக்கிடையிலான தனியார் பஸ்களை பிரச்சினையின்றி இயக்க முடியும் எனவும் அதன் தலைவர் சரத் விஜித குமார குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு!

காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 2 ஆண்டுகள்...

தாஜுதீனின் கொலை குறித்து புதிய கோணத்தில் விசாரணை

றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே HIVதொற்று அதிகரிக்கும் அபாயம்: கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக நோயாளர்கள் பதிவு.

இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம்...

பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...