நேற்று (24) சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 23ஆவது பட்டமளிப்பு விழாவில், பூகோள விஞ்ஞான பீடத்தில் கற்கை நெறியைத் தொடர்ந்த புத்தளம் கனமுல்ல பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இப்திஸாம் இர்ஷாத் மரிக்கார் நில அளவையில் துறையில் ( BSc honours in Surveying Sciences specialized in surveying and geodesy) பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
பூகோள விஞ்ஞான பீட பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் பி.ஜி.வி. அபேரத்ண தலைமையில் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இந்த பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.
மிகவும் சிறப்பான துறையில் சிறப்புத் தேர்ச்சியை பெற்றுக்கொண்ட அவரை வாழ்த்துகின்றோம்.