கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் 2வது நீதிமன்ற அறையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி, நீதிமன்ற விசாரணை கூட்டில் இருந்த சந்தர்ப்பத்திலேயே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பியோடிய நேரத்தில், சந்தேக நபர் பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளார்.