காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த பெண்ணின் வீசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேநேரம், இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மருத்துவ காரணங்களுக்காக பெறப்பட்ட விசா மூலம் அவர் இலங்கையில் தங்கியிருப்பதாகவும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கெய்லி ஃப்ரேசர் எனப்படும் குறித்த பெண் தான் தங்கியிருந்த காலத்தில் காலி முகத்திடல் போராட்டத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஊக்குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3 ஆம் திகதி குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் இலங்கையில் அவர் தங்கியிருந்த இடத்தை அணுகி அவர் தங்கியிருப்பதற்கான காரணத்தை ‘சந்தேகத்துக்குரியது’ எனக் கூறி அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர்.