காலி புகையிரத நிலையத்திற்கு அபாயா ஆடை அணிந்து வந்த இளைஞன் பொலிஸாரால் கைது!

Date:

முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா ஆடை மற்றும் பர்தா அணிந்து வந்த முஸ்லிம் இளைஞன் ஒருவரை காலி புகையிரத நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்து காலி பொலிஸாரிடம் இன்று (19) காலை ஒப்படைத்துள்ளனர்.

காலி மகுலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை புகையிரத நிலையத்திற்கு வந்த அவர் கொழும்பு செல்வதற்கான பயணச்சீட்டை வாங்கிச் சென்றதையடுத்து அவரின் குரலில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சோதனையிட்டனர்.

அங்கு முஸ்லிம் பெண் உடை அணிந்திருந்தாலும் அவர் ஆணாக இருப்பதை ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்தனர்.

இதனையடுத்து, புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன் பொலிஸாரின் விசாரணையின் போது தனது காதலிக்கு வேறு ஒரு இளைஞனுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பிரகாரம், பெண் ஆடை அணிந்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆடை அவரது தாயாரின் ஆடை எனவும் தெரியவந்துள்ளதுடன், குறித்த சந்தேகநபரை காலி புகையிரத நிலையத்தின் பாதுகாப்புப் பிரிவின் நிலையத் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...