காலி முகத்திடல் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், சடலங்கள் தொடர்பில் உடனடியாக விசாரிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள்!

Date:

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் சடலங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபர் விக்கிரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல நபர்களின் மரணத்திற்கு காரணமான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக விடயங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் சடலங்கள் கரை ஒதுங்குவது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பிலும் சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில், அதிகாரிகளிடமிருந்து எந்த விளக்கமும் இல்லாத நிலையில், இதுபோன்ற உடல்கள் இருப்பது பொதுமக்களின் ஒரு பிரிவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியதை சட்டத்தரணிகள் சங்கம் அவதானித்துள்ளது.

இதேவேளை, சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பொதுமக்களின் நம்பிக்கை பேணப்படுவதை உறுதி செய்வதற்கும் இலங்கையின் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு உறுதி செய்வதற்கும் இவ்விரு விடயங்களையும் அவசரமாக விசாரணை செய்ய வேண்டியதன் அவசியத்தை இலங்கை சட்டத்தரணிகள் வங்கம் வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...