இலங்கையின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை சமூக ஊடகங்களில் ஆவணப்படுத்தி வந்த பிரித்தானிய பெண் இன்ஸ்டாகிராமர் கெய்லி பிரேசர், தன்னை இலங்கையிலிருந்து நாடு வெளியேற்றுவதற்கான அதிகாரிகளின் முடிவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், விசா நிபந்தனைகளை மீறியதற்காக பிரேசருக்கு வழங்கப்பட்ட வீசாவை நிறுத்துவதற்கு தீர்மானித்திருந்ததுடன், ஆகஸ்ட் 15 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுமாறு அவருக்கு அறிவித்திருந்தது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தன்னிச்சையான முறையில் நாடு கடத்தும் முடிவை ரத்து செய்ய உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியுள்ளார்.
மனுதாரர், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.