குழந்தையின் பசிக்கு உணவளிக்க பால் மா டப்பாவை திருடிய தந்தை கைது!

Date:

அளுத்கம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து 3,100 ரூபா பெறுமதியான குழந்தைகளுக்காக கொடுக்கப்படும் பால் மாவை திருடிய குற்றச்சாட்டில் 30 வயதுடைய மீனவர் தந்தை ஒருவர் அளுத்கம பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது ஒரு வயது எட்டு மாத குழந்தையின் பசியை போக்க பால் பவுடர் டப்பாவை திருடியதாக அவர் அழுது கொண்டே பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த  தந்தை பல்பொருள் அங்காடிக்கு சென்று பால் பவுடர் டப்பாவை எடுத்து அவர் அணிந்திருந்த சட்டையில் மறைக்க முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து பெண் ஊழியர் ஒருவர் சம்பவத்தை பார்த்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்து சந்தேகநபரான தந்தையை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...